Friday, July 10, 2009

விமானத்தில் அதிக பயணிகளை திணித்துச் சென்றது கண்டுபிடிப்பு: ஏர் இந்தியாவுக்கு புது நெருக்கடி

நம்ம ஊர்ல பஸ்ல புட்போடு அடிச்சு கேள்விபட்டிருக்கேன் ஆனா பிளைட்டுல புட்போடு அடிச்சு இப்பதான் கேள்விப்படுறேன்

மும்பை பெங்களூர் இடையே இயக்கப்படும் ஐசி179 என்ற ஏர்பஸ் ஏ 324ல் மொத்தம் 172 இருக்கைகள் உள்ளன. கடந்த மே 5ம் தேதி மும்பையில் இருந்து கிளம்பிய விமானத்தின் கதவு உடைந்ததால் அதில் இருந்த பயணிகள் மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டனர். அப்போது விமானத்தில் ஒரு பெண் பயணி உள்பட 3 பேர் அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர்களில் இருவர் தற்காலிக இருக்கைகளில் பயணித்தது தெரியவந்தது.

இந்த இருக்கைகளில் விமான பணியாளர்கள் விமானம் கிளம்பும் போதும் மற்றும் தரை இறங்கும் போதும் அமர்வது வழக்கம். பிற நேரங்களில் அது காலியாகவே இருக்கும்.


மேலும் ஒரு பயணி காக்பிட் அறையில் அமர்ந்து பயணித்துள் ளார். பைலட்கள் இருக் கும் காக்பிட் அறையில் மொத்தம் 3 இருக்கைகள் இருக்கும். இதில் பைலட், கோ பைலட் இரு இருக்கைகளில் இருப்பார்கள். ஜம்ப் சீட் எனப்படும் 3வது இருக்கை பெரும்பாலும் காலியாகவே இருக்கும். இதில் ஒரு பயணி பயணித்துள் ளார்.

இந்நிலையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 5 ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விமான விதிகளை மீறியதாக ஏர் இந்தியா நிறுவனம் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என சிவில் ஏவியேஷன் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment