Sunday, May 29, 2011

தேர்தல் வெற்றிக்காக தொடரும் உடல் உருப்புகள் காணிக்கைகள் தடுத்து நிறுத்தப்படுமா ?

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் தெரிவாக வேண்டுமென வேண்டுதல் செய்து நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு சத்துணவுத் துறையில் வேலையும் மருத்துவ செலவுக்கு ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர் தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கௌரியம்மன் கோவிலில் தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவியும் அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும் சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார். இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதாவின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெயலலிதா வழங்கினார்.அவருக்கு மாதம் 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான 36 ஆயிரத்து 195 ரூபாவை செலுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர்.அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இது தவிர அவரது சொந்தக் கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையை எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து தற்போது
சேலம் தாதகாப்பட்டி கேட் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. இவரது மனைவி வாணி(40). அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர். தேர்தல் நேரத்தில் இவர் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டால் கை பெருவிரலை காணிக்கையாக்குகிறேன் என்றார். அதன்படி அ.தி.மு.க. அமோக வெற்றி ஜெயலலிதாவும் முதல்-அமைச்சர் ஆகிவிட்டார் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்த வாணி முடிவு செய்தார்.
இன்று காலை தனது வீட்டில் இருந்து வாணி கோவிலுக்கு புறப்பட்டார். பின்னர் காளியம்மனுக்கு முன் நின்று கத்தியால் தனது பெருவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் வாணி மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்தவர்கள் ஓடிச்சென்று அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்று நாக்கை அறுத்துக்கொண்ட சரிதாவிற்கு சிகிச்சை மட்டும் கொடுத்திருந்தால் இன்று இது போன்ற சம்பவம் தொடர்ந்திருக்காது அரசுவேலை கொடுத்ததால் இன்னும் எதனை பேர் எதைஎதை அருக்கப்போகிரார்கள் என்று தெரியவில்லை இதனை முதல்வர் தடுக்கவேண்டும் என்றால் முதல்வர் முதலில் ஒரு அறிக்கை வெளியிடவேண்டும் அதில் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அரசு பணி வழங்கப்படமாட்டது ,நிவாரண தொகையும் வழங்கப்படமாட்டாது என அறிவிக்க வேண்டும் அப்போது தான் இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும்