Thursday, August 4, 2011

கலவரத்தை தூண்டும் விதத்தில் கலைஞரின் அறிக்கை

நான் ,நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்று சொன்ன தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார் அதில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றிய ஜாபர்சேட் நல்லவர்,நேர்மையானவர் என கூறியிருக்கிறார் அது விசாரணையில் தெரியவரும் என்பது வேறு ஆனால் கலைஞர் மத உணர்வுகளை தூண்டும் விதத்தில் அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்ததக்கது (தீவிர வாதிகள் .ஊழல் வாதிகள் போன்றோக்கு மதம் கிடையாது )ஆனால் கலைஞர் அவர்களின் இத்தகைய செயல்பாடு ஏற்க்கனவே நாம் பார்த்தது தான் ராசா மீது ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தலித் என்பதால் ராசா மீது பொய் வழக்கு போடுகிறார்கள் என கூறினார் இதுபோன்ற செயல்கள் மதமோதல் ,ஜாதி மோதல் போன்றவை ஏற்ப்பட வழிகோலுகின்றது இதை கலைஞர் தவிர்த்திருக்க வேண்டும் ஜாபர்சேட் நல்லவர்,நேர்மையானவர் என கூறியிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை .உங்கள் பார்வைக்காக அந்த அறிக்கை

ஜாபர்சேட் மீது நடவடிக்கை : கலைஞர் ஆவேசம்

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பழிவாங்கும் பொய் வழக்கு நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு எந்த அளவிற்கு ஈடுபடுகிறது என்பதற்கு மற்றும் ஓர் உதாரணத்தை விளக்கிட விரும்புகிறேன்.

கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் புலனாய்வுத் துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பணியாற்றியவர்தான் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஜாபர்சேட், ஐ.பி.எஸ். அரசுக்கு எந்த அளவிற்கு உண்மையாக, விசுவாசமாக பணியாற்ற வேண்டுமோ அந்த அளவிற்கு அவர் பணியாற்றினார் என்பது உண்மை.

ஆனால் தற்போதுள்ள ஆட்சியினர் நேர்மையாகவும், திறமையாகவும் பணி புரிந்ததையே ஒரு குற்றமாக எடுத்துக் கொண்டு, நீ எப்படி அரசுக்கு விசுவாசமாகப் பணியாற்றலாம்? அது தவறல்லவா? அதனால் நீ இருக்க வேண்டிய இடம் மண்டபம் முகாம்தான்! எனவே உன்னை அங்கே மாற்றுகிறேன் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; பழி வாங்கும் அஸ்திரம் பாய்ந்துள்ளது.

கூடுதல் டி.ஜி.பி. நிலையிலே பணியாற்றும் அந்த அதிகாரியின் மீதான குற்றச்சாட்டு தமிழக அரசின் வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டினைப் பெற்று அதன் மூலமாக பல கோடி ரூபாயைச் சம்பாதித்துவிட்டார் என்பதுதானாம்!

இந்த வீட்டு வசதி வாரிய மனைகள் ஒதுக்கீடு என்பதில் - அரசு விருப்புரிமை அடிப்படையில் வழங்கலாம் என்று முடிவெடுத்ததே அ.தி.மு.க. ஆட்சியிலேதான். அதற்கான அரசாணை 25-1-1979-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் அல்லது மனைகளில் 85 சதவிகிதத்தை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதும் - மீதியுள்ள 15 சதவிகிதத்தை அரசு, தனது விருப்புரிமையின் கீழ் ஒதுக்கீடு செய்வதும் தொடர்ந்து நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.

அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் தரப்படும் வீடுகள் அல்லது மனைகள் சலுகை விலையிலே தரப்படுவதில்லை. குலுக்கல் முறையிலே விற்கப்படுபவர்களிடம் பெறப்படும் அதே தொகைதான் - அதாவது சந்தை மதிப்பைத்தான் (மார்க்கெட் ரேட்), விருப்புரிமை அடிப்படையில் பெறுபவர்களிடமும் வசூலிக்கப்படுகிறது.

அதிலும் தற்போது தி.மு.கழக அரசின் ஆட்சிக் காலத்தில் விருப்புரிமை ஒதுக்கீட்டின்கீழ் வீட்டுமனை பெற்றவர்கள், அவர்கள் மனையின் விலையாகக் கட்ட வேண்டிய தொகை மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, அந்தத் தொகையை கட்ட முடியாத நிலையில் வீட்டு வசதி வாரியத்திற்கே மீண்டும் அந்த வீட்டுமனைகளை ஒப்படைத்து விட்டார்கள் என்பதற்கு பல எடுத்துக் காட்டுகள் உண்டு.

எந்த விதிமுறைகளையும் மீறி இந்த வீட்டுமனைகள் கழக ஆட்சிக்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியிலே என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவோ, அவற்றில் ஒன்றைக்கூட கழக ஆட்சிக் காலத்திலே மாற்றவில்லை.

இந்த அரசாங்கம் பழி வாங்கும் நடவடிக்கைக்கு உச்சக் கட்டமாகச் சென்று, இந்தக் குறிப்பிட்ட அதிகாரியைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ததோடு, அவர் மண்டபம் முகாமிலேதான் பணி நீக்கக் காலத்திலே இருக்க வேண்டும், சென்னையிலே உள்ள அவரது குடும்பத்தினரோடு இருக்கக் கூடாது என்றால் அதற்கு என்ன பெயர்? அதிலும் சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர் அவர்.

தற்போது அவர்களுக்கு நோன்பு காலமாகும். இந்த நேரத்தில் அவர் குடும்பத்தினரைக் காணக் கூடாது என்றெல்லாம் உத்தரவிடுவது எந்த அளவிற்கு நெறிக்குட்பட்டது? ஏன் இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள்?

அரசுக்கு விசுவாசமான அதிகாரிகளையெல்லாம் பழி வாங்கினால், மற்ற அதிகாரிகள் எல்லாம் ஒரு அரசுக்கு விசுவாசமாக நாம் பணியாற்றினால், அடுத்து வரும் ஆட்சியிலே தாங்கள் பழி வாங்கப்பட நேரிடும் என்று நினைத்தால், தங்கள் பணியினை முறையாகவும் நிறைவாகவும் ஆற்ற முடியுமா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கெல்லாம் சங்கங்கள் எல்லாம் இருப்பதாகச் சொல்கிறார்களே? அந்தச் சங்கங்கள் எல்லாம் இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கிறதா? ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குரிய அதிகாரிகள் என்று சொல்லப்படுகிறதே, அந்த மத்திய அரசாவது இதுபோன்ற நிலைமைகளில் கவனம் செலுத்துமா?

இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி எப்போது? பழிவாங்குவதிலே நிர்வாகத்திறனைக் காட்ட முயற்சிப்பதை, நிர்வாக வரலாறு நிச்சயமாக ஏற்காது!’’ என்று கூறியுள்ளார்.

Thursday, June 9, 2011

தமிழகத்தில் இதற்க்கு முன்னர் நடந்த பேருந்து விபத்துக்கள்

நேற்று அந்த பிணங்களை பார்க்கும்போது மிகவும் கொடுமையாக இருந்தது ,மிகவும் வெந்த நிலையில் அடையாளம் தெரியாமல் இருந்தது ,குத்துமதிப்பாக அந்த உடல்களின் பருமனை பார்த்து எடுத்துச்சென்றனர் இறந்தவர்களின் உறவினர்கள் அழுதது நெஞ்சை உலுக்குவது போன்று இருந்தது எனக்கு அந்த பேருந்தில் இன்னும் உடல்களின் எச்சம் ஒட்டி இருந்தது .யாரோ ஒரு பயணி தன்னுடைய உறவுகளுக்கு புது துணிமணி வாங்கி இருக்கிறார் அவையும் எரிந்து அதில் ஒட்டி இருக்கும் விலைப்பட்டியல் மட்டும் அப்படியே இருந்தது என்னுடன் வந்த காமிராமேன் மிகவும் சிரமப்பட்டு அந்த காட்சிகளை படமாக்கினார் இனிமேலாவது தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கவனிப்பார்களா அரசும் இதற்க்கு விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும் அதே போல் நள்ளிரவில் விபத்து நிகழ்ந்த நேரத்தில் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் திடீரென விபத்துக்குள்ளாகி உருண்டு தீப்பிடித்ததால் பலரும் நிலை குலைந் தனர். தப்பி வெளியேறுவதற்கான அவசர வழிகள் எங்கே உள்ளன என்பது தெரியாத நிலையில் தீயில் கருகி பலியானதாக கூறப்படுகிறது சில பேருந்துகளில் அவசர வழி என்பதே கிடையாது அந்த இடத்தையும் அடைத்து காசு பார்கிறார்கள் இந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்பயங்கர பஸ் விபத்துகள் * 2000 டிச., : ஊத்தங்கரை அருகே தனியார் பஸ், லாரியுடன் மோதி ஏரிக்குள் கவிழ்ந்தது. இதில் 17 பேர் பலி. * 2000: திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரத்தில் சுற்றுலா வேன் சாலையோர கிணற்றில் கவிழ்ந்து 17 பேர் பலி. 8 பேர் காயம். * 2001: சங்ககிரி அருகே நடந்த கோர விபத்தில் பஸ் தீப்பிடித்து, 40 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். * 2001 நவ.,: கோவில்பட்டி அருகே அரசு பஸ்சும், வேனும் மோதிக் கொண்ட விபத்தில் 27 பேர் பலி. * 2005: ராமநாதபுரம் மாவட்டம் சனவேலி பாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பஸ் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 37 பேர் பலி. * 2007: திருநெல்வேலி அருகே அரசு பஸ்சும், தனியார் ஆம்னி பஸ்சும் நேருக்குநேர் மோதியதில் 12 பேர் உயிரிழப்பு. * 2008 ஜூன்: ஊட்டி மலைப்பாதை, 500 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. இதில் 13 பேர் பலி. 45 பேர் காயம். * 2009 ஆக.,: கும்பகோணம் அருகே அரசு விரைவுப் பஸ்சும், வேனும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பலி. * 2010 மே: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஆம்னி பஸ்சும், வேனும் நேருக்குநேர் மோதியதில் 11 பேர் பலி. 14 பேர் காயம்.* 2010 டிச., 1: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரத்தில், இரண்டு தனியார் பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், 20 பேர் பலி. 43 பேர் காயம்.

Sunday, May 29, 2011

தேர்தல் வெற்றிக்காக தொடரும் உடல் உருப்புகள் காணிக்கைகள் தடுத்து நிறுத்தப்படுமா ?

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் தெரிவாக வேண்டுமென வேண்டுதல் செய்து நாக்கை வெட்டி காணிக்கை செலுத்திய பெண்ணுக்கு சத்துணவுத் துறையில் வேலையும் மருத்துவ செலவுக்கு ஒரு லட்ச ரூபாயும் முதல்வர் ஜெயலலிதா அளித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் வர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியைச் சேர்ந்த சரிதா என்பவர் தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கௌரியம்மன் கோவிலில் தன் நாக்கை அறுத்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் கணவனால் கைவிடப்பட்டு ஏழ்மை நிலையில் உள்ளார். இவர் நாக்கை அறுத்து நேர்த்திக்கடன் செலுத்தியதும் ஆண்டிப்பட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவியும் அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது

இதுபற்றி முதல்வர் ஜெயலலிதா அறிந்ததும் சரிதாவை உடனே சென்னைக்கு வரவழைத்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிட்டிருந்தார். இதன்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரிதா அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்த பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சரிதாவின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்துக்கு சரிதாவை வரவழைத்தார். அவரது எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன உத்தரவை ஜெயலலிதா வழங்கினார்.அவருக்கு மாதம் 2,077 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மேலும் எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கட்டணத் தொகையான 36 ஆயிரத்து 195 ரூபாவை செலுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர்.அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இது தவிர அவரது சொந்தக் கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையை எம்.ஜி.ஆர் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து தற்போது
சேலம் தாதகாப்பட்டி கேட் விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. அ.தி.மு.க. மேலவை பிரதிநிதி. இவரது மனைவி வாணி(40). அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர். தேர்தல் நேரத்தில் இவர் அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அப்போது அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்று விட்டால் கை பெருவிரலை காணிக்கையாக்குகிறேன் என்றார். அதன்படி அ.தி.மு.க. அமோக வெற்றி ஜெயலலிதாவும் முதல்-அமைச்சர் ஆகிவிட்டார் என்பதால் நேர்த்திக்கடன் செலுத்த வாணி முடிவு செய்தார்.
இன்று காலை தனது வீட்டில் இருந்து வாணி கோவிலுக்கு புறப்பட்டார். பின்னர் காளியம்மனுக்கு முன் நின்று கத்தியால் தனது பெருவிரலை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார். ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் வாணி மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்தவர்கள் ஓடிச்சென்று அவரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
அன்று நாக்கை அறுத்துக்கொண்ட சரிதாவிற்கு சிகிச்சை மட்டும் கொடுத்திருந்தால் இன்று இது போன்ற சம்பவம் தொடர்ந்திருக்காது அரசுவேலை கொடுத்ததால் இன்னும் எதனை பேர் எதைஎதை அருக்கப்போகிரார்கள் என்று தெரியவில்லை இதனை முதல்வர் தடுக்கவேண்டும் என்றால் முதல்வர் முதலில் ஒரு அறிக்கை வெளியிடவேண்டும் அதில் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அரசு பணி வழங்கப்படமாட்டது ,நிவாரண தொகையும் வழங்கப்படமாட்டாது என அறிவிக்க வேண்டும் அப்போது தான் இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும்