Friday, July 10, 2009

இலங்கை: அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட எண்ணிக்கையில் மாற்றமில்லை: ஐ.நா.


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவம் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு வலயப் பகுதியில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கையை மாற்றம் செய்யப் போவதில்லை என்று ஐ.நா. பேச்சாளர் கார்டன் வீஸ் கூறியுள்ளார்.


போர் நடந்தபோது மே 15ஆம் தேதிவரை பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்து காயம்பட்ட மக்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வி. சண்முகராஜா, துரைராஜா வரதராஜா, தங்கமுத்து சத்தியமூர்த்தி, சிவபாலன், இளஞ்செழியன் பல்லவன் ஆகியோர் கடந்த புதன்கிழமை கொழும்புவில் பேட்டியளித்தபோது, போர் நடந்த நேரத்தில் கொல்லப்பட்டதாகத் தாங்கள் கொடுத்த அப்பாவி மக்களின் மரண எண்ணிக்கை விடுதலைப் புலிகளின் வற்புறுத்தலால் கொடுத்தது என்று கூறினர்.

மே 15ஆம் தேதி பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களுடன் வெளியேறிய இவர்களை சிறிலங்க இராணுவம் கைது செய்து கொழும்பு கொண்டு சென்று பயங்கரவாத புலனாய்வு பிரிவில் அடைத்து வைத்து விசாரணை செய்து வந்தது. சற்றேறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர்களை செய்தியாளர்களைச் சந்திக்க வைத்தது இலங்கை அரசு.

இந்த நிலையில், இந்த மருத்துவர்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து கொடுத்த தகவலை வைத்தே அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை குறித்து ஐ.நா. அறிக்கை தயாரித்தது. அதன்படி, ஏப்ரல் இறுதிவரை 7,000த்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த எண்ணிக்கை மிகவும் குறைவான மதிப்பீடு என்றும், ஜனவரி முதல் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிக்கை தயாரித்திருந்தது. இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அதன் உள்ளடக்கம் கசிந்ததனால் இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச அளவில் பெரும் கண்டனம் எழுந்தது.

இந்த நிலையில் தாங்கள் அளித்த விவரம் புலிகளின் வற்புறுத்தலால் அளித்ததே என்று அந்த மருத்துவர்கள் கூறியதையடுத்து உங்கள் அறிக்கையில் அளிக்கப்பட்ட எண்ணிக்கையை மாற்றுவீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த ஐ.நா.வின் பேச்சாளர் கார்டன் வீஸ், “இலங்கைப் போரில் கொலப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கைத் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கை குறித்த எங்கள் நிலையில் மாற்றமில்லை என்று கூறினார்.


இலங்கை அரசிற்கு இது சரியான செருப்படி

No comments:

Post a Comment