Thursday, July 9, 2009

தமிழகத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 64 லட்சம்

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வார்கள். பின்னர் அடுத்தடுத்து படிக்கும் உயர்கல்வி மற்றும் தொழில் நுட்ப கல்விகள் பற்றியும் பதிவு செய்கிறார்கள்.

அரசு வேலை வாய்ப்புக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமே தேர்வு செய்யப்படுவதால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்து ஆண்டுகணக்கில் காத்து இருக்கிறார்கள்.

31-03-09 நிலவரப்படி காத்திருப்போர் எண்ணிக்கை 55 லட்சத்து 11 ஆயிரத்து 542 ஆக இருந்தது. அதன்பிறகு இந்த ஆண்டு மற்றும் பிளஸ்-2 தேர்வு பெற்றவர்கள் 9 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களையும் சேர்த்து வேலை இல்லாதோர் எண்ணிக்கை 64 லட்சமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment