Tuesday, July 28, 2009

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளிடம் விடுதலைப்புலிகள் ஆயுதம் வாங்கவில்லை!

பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் ஈகமறவன் திலீபன் மன்றம் சார்பில் `ஈழத் தமிழரும்- காலக்கடமையும்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ‘’இலங்கையின் போர் முடிவுக்கு வந்த நிலையில் தமிழர்கள் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு அங்கு சிங்களர்கள் அவசர அவசரமாக குடியமர்த்தப்படுகிறார்கள். ஊர்களின் பெயரை சிங்கள பெயராக மாற்றி வருகிறார்கள்.

இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் 40 தமிழக எம்.பி.க்களும் ராஜினாமா செய்வார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அதில் அவர் உறுதியாக இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது.

விடுதலைப்புலிகளை தீவிரவாதிகள் என்று இந்திய அரசு கூறுகிறது. விடுதலைப்புலிகள் எப்போதும் சிங்கள மக்களை கொல்லவில்லை. இலங்கை ராணுவத்தை குறி வைத்தே தாக்குதல் நடத்தினார்கள்.

ஒரு தடவை 12 விடுதலைப்புலிகள் மட்டுமே சென்று 28 விமானங்களை குண்டு வைத்து தகர்த்தார்கள். அப்போது ஒரு பயணிகளின் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொண்டார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கொழும்பு நகரில் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தார்கள். அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் அவ்வளவு தூரம் சென்று தாக்கியவர்கள் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியாவை தாக்கி இருக்கலாமே. அதை ஏன் அவர்கள் செய்யவில்லை.

இந்தியாவுக்கு எதிராக மட்டும் அல்ல, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளிடம் அவர்கள் ஆயுதம் கூட பெறவில்லை’’என்று பேசினார்.

No comments:

Post a Comment