Thursday, July 9, 2009

முகாம்களில் தங்கியுள்ள மக்களில் 14000 பேர் ஊனமுற்ற நிலையில் அவதி: சமூக சேவைகள் அமைச்சு



வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்பவர்களில் 14000 பேர் ஊனமுற்ற நிலையில் அவதியுறுவதாக சமூக சேவைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
வலது குறைந்த மற்றும் சித்த சுயாதீனமற்ற 14000 பேர் முகாம்களில் தங்கியிருப்பதாக சமூக சேவைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இறுதிக் கட்ட யுத்தங்களின் போது 2800 ஊனமுற்றுள்ளதாகவும், 3968 பேர் பிறப்பிலேயே வலது குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வலது குறைந்தவர்களுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தேவைப்படுதாக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் லயனல் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment