Tuesday, July 7, 2009

நோர்வேயில் கரும்புலிகள் தினம் நினைவுகூரப்பட்டது

நோர்வேயில் கரும்புலிகள் தினம் நினைவுகூரப்பட்டது
[ செவ்வாய்க்கிழமை, 07 யூலை 2009, 02:15.56 AM GMT +05:30 ]
ஜுலை ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் கரும்புலிகள் தினம் நோர்வேயில் நினைவுகூரப்பட்டது.
தமிழீழ தேசத்தை சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்கும் இலட்சிய வேட்கையோடு தமிழீழ தேசியத்தலைவர் மேன்மை தங்கிய திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தோடும், வழிகாட்டலோடும் விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திரப்போரின் வலிமை மிக்க ஆயுதமாக தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ”கரும்புலிகள்” பிரிவில் இதுவரையிலும் தாயகமீட்பிற்காக தமது இன்னுயிர்களை ஈந்த கரும்புலிகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கான மரியாதை செய்யும் வணக்க நிகழ்வுகள் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழ் மக்களால் வருடாந்தாம் ஜுலை ஐந்தாம் நாள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்தினம் விசேடமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ”கரும்புலிகள் தினம்” நினைவுகூரப்பட்டது.

இந்நிகழ்வில் நோர்வேயின் முக்கிய பகுதிகளிலிருந்தும் தாயகவிடுதலையுணர்வு கொண்டோரும், தமிழ் ஆர்வலர்களும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு தமது மரியாதையை செலுத்தியிருந்தனர

No comments:

Post a Comment