Wednesday, July 15, 2009

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: நாளை 5ம் ஆண்டு நினைவு தினம்

பள்ளிக்கு படிக்க சென்றவர்கள் நமக்கு பாடம் கற்பித்தார்கள் இனிமேல் குழந்தைகளை ஆட்டு மந்தை போல் அடைகாதிர்கள் என்று .........!

கும்பகோணம் பள்ளி தீ விபத்து சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. தீயில் கருகி உயிரிழந்த குழந்தைகளுக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

நாளை காலை 6 மணிக்கு பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்கள், தங்கள் வீட்டில் படையலிட்டு அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் 6.30 மணிக்கு தீ விபத்து நடந்த பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ¢ச்சி நடக்கிறது.

இதில் குழந்தைகளை இழந்த பெற்றோர், காயமடைந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். காலை 10 மணிக்கு தமிழக அரசு சார்பில் நினைவு அஞ்சலி கூட்டம் நடக்கிறது.

கும்பகோணம் பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி கூட்டம் நடக்க உள்ளது. மாலை 5 மணிக்கு 94 அகல் தீபங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று கும்பகோணம் மகாமக குளத்தில் மோட்சதீபம் ஏற்றப்படுகிறது.

No comments:

Post a Comment