Monday, July 13, 2009

நிறைந்தது கபினி..காவிரியில் வேறு வழியின்றி நீரை திறந்த கர்நாடகம்


மைசூர்: கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தின் கபினி அணை நிரம்பிவிட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டு்ள்ளது. இந்த நீர் இன்று மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது.

கபினி அணை தனது முழுக் கொள்ளவை எட்டிவிட்டதையடுத்து வேறு வழியில்லாமல் நீரைத் திறந்துவிட்டுள்ளது கர்நாடகம். வினாடிக்கு சுமார் 18,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இந்த நீர் ஒகேனக்கல் அருகே உள்ள பிலிகுண்டு பகுதியை நேற்று காலை தொட்டது.

இதையடுத்து இன்று பிற்பகலில் நீர் மேட்டூர் அணையை எட்டியது. இந்த நீர் வரத்து காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் குறுவை சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

அதே போல மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அங்கிருந்தும் நீர் திறந்துவிடப்படும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

இப்போது மேட்டூர் அணையில் 59.7 அடி நீர் உள்ளது. இப்போது அணைக்கு நீர் வரத்து 3,157 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் மொத்தக் கொள்ளவு 120 அடியாகும். கடந்த மாதத்தில் ட்டூருக்கு கர்நாடகம் 10.16 டிஎம்சி அடி நீரை தந்திருக்க வேண்டும். ஆனால், 6 டிஎம்சி அடி தான் நீரை வழங்கியது.

இப்போது தனது அணை நிரம்பிவிட்டதால் அதன் பாதுகாப்பு கருதி உபரி நீரை திறந்துவிட்டுள்ளது.

No comments:

Post a Comment