Wednesday, July 22, 2009

கிரகணத்தின்போது குழந்தைப் பிறப்பைத் தவிர்க்க சிசேரியன் மூலம் பெற்ற பெண்கள்

சென்னை: சூரிய கிரகணத்தின்போது குழந்தை பிறந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் முன்கூட்டியே சிசேரியன் மூலம் கர்ப்பிணிகள் பலர் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

இன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

இந்த சூரிய கிரகணத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என ஏற்கனவே ஜோசியர்கள் பலர் பயமுறுத்தியிருந்தனர். இதனால் அதிகம் பயந்து போனவர்கள் கர்ப்பிணிப் பெண்கள்தான்.

நிறைமாத கர்ப்பிணி பெண்கள் பலர் கிரகணத்தின்போது குழந்தை பிறந்தால் பாதிப்பு வருமோ என்று பீதியடைந்தனர்.

இதையடுத்து இன்று பிறக்கலாம் என்று கூறப்பட்டிருந்த கர்ப்பிணிகள் பலர், நேற்றே சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனராம்.

இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், எனக்கு முதல் பிரசவம். எனவே சூரிய கிரணத்தால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று குடும்பத்தினர் கூறினார்கள்.

எனவே சூரிய கிரணத்துக்கு முன்பாக சிசரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்றார்.

இதேபோல சென்னை நகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகள் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

No comments:

Post a Comment