Thursday, July 9, 2009

கச்சா எண்ணெய்: 5 நாளில் 11 டாலர்கள் சரிந்தது!!


thatsTamil RSS feed thatsTamil  iGoogle gadgets Free SMS Alerts
லண்டன்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. சில தினங்களுக்கு முன் பேரல் 73 டாலர்களாக விற்று வந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 11 டாலர்கள் வரை குறைந்து 62.88 டாலர்களாக விற்பனையாகிறது.

கச்சா எண்ணெய் விலை 70 டாலர்களைத் தாண்டியதுமே, விலை உயர்ந்துவிட்டது என கூப்பாடு போட்ட இந்தியா அரசு, தாறுமாறாக பெட்ரோல் டீஸல் விலைகளை உயர்த்தியது. இதனால் கடந்த ஒரு வாரமாக அத்தியாவசியப் பொருட்கள், அன்றாட பயன்பாட்டுக்குரிய பொருட்கள் அனைத்தின் விலைகளும் உச்சத்தில் உள்ளன.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அடுத்த நிமிடமே இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்கள் விலைகளைக் குறைப்பேன் என்று முழங்கினார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா.

ஆனால் அவர் அப்படி அறிவித்த தினத்திலிருந்து தொடர்ந்து நான்கு நாட்களாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. 3 டாலர்கள் விலை உயர்ந்ததைக் காரணம் காட்டி விலைகளை ஏற்றிய இந்தியா, இப்போது 11 டாலர்கள் விலை குறைந்த பின்னும் மவுனம் சாதிக்கிறது.

கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் 2.38 டாலர்கள் விலை குறைந்துள்ளது பேரலுக்கு.

இன்றைய பிற்பகல் நிலவரப்படி நியூயார்க் மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 62.88 டாலர்களாக உள்ளது. லண்டன் பிரண்ட் க்ரூட் 63.13 டாலர்களாக விற்கப்படுகிறது.

இந்த வீழ்ச்சி நிலை அடுத்த வாரமும் தொடரும் என்றும், எதிர்பார்த்தபடி அமெரிக்கப் பொருளாதார மீட்சி இல்லாததால், காஸோலின் விலைகள் கடுமையான சரிவுப் போக்கைச் சந்திக்கும் என்றும் அமெரிக்க பெட்ரோலிய இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment