Monday, July 13, 2009

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்க கன்னட அமைப்புகள் எதிர்ப்பு

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் குதித்துள்ளன.

பெங்களூர் அல்சூர் ஏரிக்கரையில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தமிழக முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 9ல் திறந்து வைக்கிறார்.

அதேபோல சென்னை அயனாவரத்தில் கன்னடக் கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்நாடக முதல்வர் எதியூரப்பா ஆகஸ்ட் 13ம் தேதி திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து கன்னட கலாசார சங்கம் மற்றும் ஜெய் கர்நாடகா அமைப்பு ஆகியவவற்றைச் சேர்ந்தவர்கள் மல்லேஸ்வரம் தேவய்யா பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு நிறைவேற்றி வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறுத்த வேண்டும், இது தொடர்பாக இரு மாநில அரசுகளும் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அதுவரை பெங்களூரில் திருவள்ளுவர் சிலையைத் திறக்கக் கூடாது.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்னைக்குத் தீர்வு கண்ட பிறகே திருவள்ளுவர் சிலைத் திறக்கலாம் என்று அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

No comments:

Post a Comment