Monday, July 13, 2009

இலங்கை நிவாரண முகாம்களில் 2.5 லட்சம் தமிழர்களுக்கு 50 டாக்டர்கள்

இலங்கை நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் கூறியுள்ளார்.

இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா மற்றும் செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் உள்ள 2.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்க 50 டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் இரவு பகலாகப் பணியாற்ற வேண்டியுள்ளது.

300 நர்சுகள் இருக்கவேண்டிய நிலையில் 10 பேர் மட்டுமே உள்ளனர். இதனால், டாக்டர்களே நர்சுகளின் பணியையும் செய்ய வேண்டியுள்ளது.

டாக்டர்கள் தங்குவதற்கு சரியான வசதியில்லை. கடந்த வாரம் சுமார் 5 ஆயிரம் பேர் சின்னம்மையால் பாதிக்கப்பட்டனர். நர்சுகளின் உதவி இல்லாமலேயே அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைமை உள்ளது என்று கூறியுள்ளார்.

முகாம்களில் உள்ள தமிழர்களின் சுகாதாரத் தேவைகளை கவனிக்க உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment