Wednesday, July 15, 2009

காவலுக்கு கெட்டிக்காரன்கள்:அழிந்து வரும் அவலம்

நாய்களின் இனத்தில் ராஜபாளையம் நாய்களுக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. அந்த நாய்கள் கம்பீரமாகவும், அழகாகவும் இருக்கும். எஜமானர்களுக்கு விசுவாசமாகவும், காவலுக்கு கெட்டிக்காரனாகவும் அவை திகழ்கின்றன.

விஜயநகர பேரரசின் ஆட்சியின்போது அவை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு இனவிருத்தி செய்யப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அவற்றின் இனம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. எனவே அந்த நாய் இனத்தை காப்பாற்ற தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ராஜபாளையத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த இனம் உற்பத்தி செய்வது குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதன்மூலம் சுத்தமான ராஜபாளையம் இனவகை நாய்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறித்து கணக்கெடுத்து பதிவு செய்யப்படும்.

மேலும் இந்த வகை நாய்கள் உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் ராஜபாளையம் இனவகை நாய்களுக்கான சிறப்பு கண்காட்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment