Saturday, July 25, 2009

வன்னி காட்டிலிருந்து படையினர் மீது விடுதலைப்புலிகள் கெரில்லா தாக்குதல் ‐ இராணுவத்தரப்பு



அரசாங்கம் விடுதலைப்புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதாக கூறிய போதிலும் வன்னி காட்டில் மறைந்துள்ள விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் படையினர் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை நடத்திவருவதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்னர் வன்னிக் காட்டுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் காயமடைந்த படையினர் உலங்குவானூர்தி மூலம் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்கள் தொடர்ந்தும் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பலாலி இராணுவ மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன.

வன்னியில் இடம்பெறும் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் குறித்து தென் பகுதியில் உள்ள ஊடகங்களுக்கு தகவல்கள் கிடைத்த போதிலும், தெற்கில் நிலவும் சுயதணிக்கை காரணமாக அந்த செய்திகள் வெளியிடப்படுவதில்லை என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல் ஒன்றில் ஒரு இராணுவ கப்டன் உட்பட மூன்று படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இது குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான தகவலையும் திரட்டமுடியவில்லை.

No comments:

Post a Comment