Wednesday, July 15, 2009

எத்தனை பெரியார் வந்தாலும் இவங்கள திருத்தவே முடியாது.... 1000 பேருக்கு விருந்து அளித்து தவளைக்கு திருமணம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மழை வேண்டி தவளை ஜோடிக்கு திருமணம் நடத்தப்பட்டது.

பருவமழை சீசன் தொடங்கிய பிறகும் தமிழகத்தில் மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழை இல்லாமல் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வருண பகவானை குளிர்விக்க சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகிறது. அரசு வேம்பு திருமணம், கழுதைகள் திருமணம் போன்ற சம்பிரதாய விஷயங்களிலும் மக்கள் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள படப்பள்ளி கிராமமக்கள் மழை வேண்டி தவளை திருமணத்தை நடத்தினர். சம்பந்தம் பேசுவது, மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, ஊர்வலம் என எல்லா சடங்குகளும் மேளதாளம் முழங்க நடந்தது.

பின்னர் படப்பள்ளி ஏரியில் சுபமூகூர்த்த நேரத்தில் மந்திரங்கள், கெட்டிமேளம் முழங்க தவளைக்கும், தவளைக்கும் திருமணத்தை நடத்தினர். இதில் கிராம மக்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என தனித்தனியாக சீர் வரிசைகளை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆயிரம் பேருக்கு இனிப்புடன் விருந்து வழங்கப்பட்டது.

சம்பிரதாயங்கள் முடிந்ததும் தவளை ஜோடியை ஊர் பெரியவர்கள் படப்பள்ளி ஏரியில் விடுவித்தனர்.

No comments:

Post a Comment