Wednesday, July 15, 2009

இங்கிலாந்து பெண்கள் மேக்-அப் செலவு 5 ஆயிரம் கோடி

இங்கிலாந்து பெண்கள் தங்களை அழகு படுத்திக் கொள்வதில் மிகவும் அக்கரை எடுத்துக் கொள்வார்கள். இதற்காக வித விதமான மேக்-அப் சாதனங்களை வாங்கி குவிப்பது உண்டு. அவர்கள் “மேக்-அப்”புக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள்? என்று ஒரு கணிப்பு நடத்தப்பட்டது. 1000 பெண்களில் இந்த கணிப்பை நடத்தினார்கள்.

அதில் இங்கிலாந்து பெண்கள் மாதந்தோறும் 5,500 கோடி அளவுக்கு மேக்-அப் சாதனங்களுக்காக செலவு செய்வது தெரியவந்தது. சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் தனது மேக்-அப்பையில் 4,700 மதிப்புள்ள மேக்-அப் பொருட்களை வைத்து இருந்தனர்.

16 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரூ.5,500 மதிப்புள்ள மேக்-அப் பொருள்களையும் 25 வய தில் இருந்து 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ரூ.5,700 மதிப்புள்ள மேக்-அப் பொருட்களையும் பையில் வைத்து இருந்தனர்.

மேக்-அப் பொருள் பெண்களுக்கு அத்தியாவசியமானது என்று 62 சதவீதம் பேர் தெரிவித்தனர். 38 சதவீதம் பேர் “லிப்ஸ்டிக்” கண்டிப்பாக தேவை என்றனர்.

37 சதவீதம் பேர் மேக்-அப் இல்லாமல் எங்களால் இருக்கவே முடியாது என்றனர்.

No comments:

Post a Comment