Friday, July 10, 2009

வேலை வாய்ப்பு பதிவினை புதுப்பிக்க தவறியோருக்கு சலுகை


2008ஆ‌‌ம் ஆ‌ண்டு வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, இந்த ஆண்டில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும் என்று தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அளித்து பேசுகை‌யி‌ல், இந்த ஆண்டு முதல், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (அரசு ஐ.டி.ஐ.) பயிலும், சுமார் 16 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு, இலவச பேரு‌ந்து பாஸ் வழங்கப்படும்.


ஸ்ரீபெரும்புதூரில் அதிக தொழிற்சாலைகள் உள்ளதால், சென்னையில் உள்ள காஞ்‌சிபுரம் தொழிற்சாலைகள் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் சென்னை குறளகத்தில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம் 1) அலுவலகம் ஸ்ரீபெரும்புதூருக்கு மாற்றம் செய்யப்படும்.

புதிதாக அறிவிக்கப்பட்ட அரியலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அமைக்கப்படும்.

கடந்த 2008ஆம் ஆண்டில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, இந்த ஆண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும்.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ், 17 மாவட்டங்களில் உள்ள சிறப்பு பள்ளிகளில் பணியாற்றி வரும் 1840 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், மாதம் தோறும் பெற்றுவரும் மதிப்பூதியத்தை, 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

No comments:

Post a Comment