Wednesday, July 8, 2009

5ம் ஈழப்போரை விரைவில் பிரபாகரன் முன்னெடுப்பார்: பழ.நெடுமாறன்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் உயிருடன் உள்ளார் என்றும், 5ம் ஈழப்போரை விரைவில் பிரபாகரன் முன்னெடுப்பார் என்றும் தமிழ் தேசிய தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

தமிழ் ஈழ ஆதரவாளர்கள் கருத்தரங்கம் திருப்பூரில் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழ் தேசியத் தலைவர் பழ.நெடுமாறன்,

போர் முடிந்தும் கூட இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் பிச்சைக்காரர்கள் போல் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் இளம்பெண்களை சிங்கள ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று சொல்ல முடியாத துயரங்களை செய்கிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் பெண்கள் வயிற்றில் சிங்கள குழந்தைகள் உருவாகி வருகிறார்கள். தமிழ் இனத்தை அழிப்பதே இதன் நோக்கமாகும்.

போரில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்தாக இலங்கை ராணுவம் அறிவித்தது. மரபணு சோதனை நடத்திய பின்பு பிரபாகரனின் உடலை எரித்து விட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். ஆனால் இலங்கையில் மரபணு சோதனை நடத்த வசதியில்லை. மேலும் மரபணு சோதனைக்காக பிரபாகரனின் ரத்த உறவுகளிடம் சோதனை மேற்கொள்ளவில்லை.

30 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்துக்கு சவால் விட்டு வரும் பிரபாகரன் கொல்லப்பட்டு இருந்தால், அவருடைய உடலை எடுத்துக் கொண்டு இலங்கை மாநகரில் ராணுவத்தினர் ஊர்வலம் நடத்தியிருப்பார்கள். சர்வதேச பத்திரியாளர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்திருப்பார்கள். ஆனால் இப்போது அவசர அவசரமாக பிரபாகரன் உடலை எரித்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

கடந்த 1984, 1987, 1989, 2004 என்று 4 முறை பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. அதுபோல் இந்த முறையும் அறிவித்துள்ளது. இதுவரை 4 ஈழப்போர் நடந்து முடிந்துள்ளது. 5 வது ஈழப்போரை பிரபாகரன் விரைவில் முன்னெடுத்து நடத்துவார். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தமிழர்கள் உரிமை பெறவும், உலக தமிழர்கள் உரிமை பெறவும் உலகில் உள்ள 10 கோடி தமிழர்கள் ஒன்று பட்டு போராட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment