Friday, July 10, 2009

மதிமுக பிரமுகர் மீதான தே.பா.சட்டம் ரத்து: ஜனாதிபதி

கோவையை அடுத்த நீலாம்பூரில் சில மாதங்களுக்கு முன் ராணுவ லாரிகள் தாக்கப்பட்டன. இலங்கைக்கு ஆயுதம் எடுத்துச் செல்வதாக கூறி பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.வினரும் ராணுவ வாகானம் மீது தாக்கினர்.

இது தொடர்பாக 46 பேர் கைது செய்யப்பட்டனர். 6 பேர் சரண் அடைந்தனர். கைதான வழக்கில் கோவை நகர ம.தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் பீளமேடுபுதூர் சந்திரசேகரன் உள்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து ஜனாதிபதிக்கு சந்திரசேகரன் மனு அனுப்பினார். மனுவை பரிசீலித்த ஜனாதிபதி பிரதீபாபட்டீல், சந்திரசேகரன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்ததை ரத்து செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment