Wednesday, July 15, 2009

வட சென்னைக்கு பூகம்ப ஆபத்து அதிகம்:மக்கள் கலக்கம்

சென்னையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி வல்லுனர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் சென்னையில் உள்ள புவியியல் அமைப்பை ஆராய்ந்த போது சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஒருவேளை சென்னையில் பூகம்பம் ஏற்பட்டால் தென் சென்னையை விட வட சென்னைக்குத்தான் அதிக ஆபத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் வட சென்னையின் அடிப்பகுதியில் பாறை மற்றும் மணல் நிறைந்து காணப்படுகிறது. இதனால் பூகம்பம் ஏற்படும் போது கட்டிடங்கள் எளிதில் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

தென் சென்னையை பொறுத்தவரை பூமியின் அடிப்பகுதி ஓரளவு நல்ல நிலையில் உள்ளது. பூகம்பத்தின் போது பெரிய அளவுக்கு கட்டிடங்கள் சேதம் அடையாது.

தேசிய பேரழிவு மேலான்மை அலுவலக அதிகாரி ஒருவர்,

சென்னை நகரம் மிதமான பூகம்பம் ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் கடந்த 1972-ம் ஆண்டு ஜூலை மாதம் 10ந்தேதி அன்று பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.9 என்று பதிவாகி உள்ளது.

இதற்கு முன்பு 1807 மற்றும் 1816 ஆண்டுகளில் சென்னையில் 5 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக இந்தோனேஷியாவில் தொடர்ந்து பூகம்பம் மிரட்டி வருகிறது. அந்த பூகம்பம் என்றாவது ஒரு நாள் பெரிய அளவில் ஏற்பட்டால் சுனாமி உருவில் நம் நாட்டுக்கு பலத்த சேதம் ஏற்படும். ஒரு வேளை சென்னையில் நிகழ்ந்தால்... உயிரிழப்பு கடுமையாக இருக்கும்.

எனவே சென்னையில் கட்டிடம் கட்டுவோர் பூகம்ப தடுப்பு முறையைப்பயன்படுத்தி கட்ட வேண்டும் என்று புவியியல் ஆராய்ச் சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே சில ஜோதிடர்கள் 22-ந்தேதி சூரிய கிரகணத்தின் போது சுனாமி ஏற்படும் என்று கணித்துள்ளனர்.

இதனால் சென்னை மக்களிடம் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment