Friday, July 10, 2009

லுங்கி அணிந்தவர்கள் சினிமா பார்க்க தடை



சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள், கிளப்களில் டிரைவ்கொட் என்கிற ஆடை உடுத்தும் விதிமுறைகள் கடுமையாக்கடை பிடிக்கப்பட்டு வருகின்றன. சில ஓட்டல்கள் வேட்டி கட்டி செல்ல தடை போட்டுள்ளன. ரப்பர் செருப்புகள் போட்டு செல்லவும் அனுமதி கிடையாது.

நட்சத்திர ஓட்டல் மதுபான பார்களில் எந்த வகை செருப்பு அணிந்து வருகிறார் என்பதை கண்காணிப்பதற்கென்றே தனியாக பாதுகாவலர் நிற்கிறார். ரப்பர் செருப்புடன் வருவோரை தடுத்து நிறுத்தி வெளியேற்றி விடுகிறார்.

பல ஓட்டல்களிலும் கோட்சூட் பிரதான உடையாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த டிரெஸ் அணிந்து வருவோருக்கு தடபுடல் வரவேற்பு கிடைக்கும்.

இந்த முறை இப்போது தியேட்டர்களுக்கும் வந்துள்ளது. மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் சாதாரணமாகவே வேட்டி, லுங்கியுடன் வருவோரை பார்க்க முடிவதில்லை. ஆனால் எந்த தியேட்டர்களும் அது போல் ஆடை உடுத்துபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிப்பு செய்யவில்லை.

முதல் தடவையாக கமலா தியேட்டரில் டிரஸ் கோட் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வடபழனி பஸ் நிலையம் அருகில் இந்த தியேட்டர் உள்ளது. சமீபத்தில்தான் இது புதுப்பிக்கப்பட்டு இரண்டு தியேட்டர்களாக கட்டப்பட்டு உள்ளது.

இத்தியேட்டர் வாயிலில் லுங்கி அணிந்து வருவோருக்கு அனுமதி இல்லை என்று போர்டு எழுதி வைக்கப்பட்டு உள்ளது.

தியேட்டர் நிர்வாகத்தினர் இதுபற்றி கூறும் போது, லுங்கி அணிந்து வருபவர்களில் சிலர் மதுபானங்களை தியேட்டருக்குள் மறைத்து கொண்டு வந்து தொந்தரவுகள் ஏற்படுத்துகின்றனர். எனவே தான் லுங்கிக்கு தடை போட்டுள்ளோம் என்றனர். அதே வேளை லுங்கி அணிந்து வரும் சாப்ட்வேர் பணியாளர்களுக்கு இது எதிரானது அல்ல என்றும் கூறினார்கள்.


சினிமாவில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான டெக்னீசியன்கள், ஸ்டன்ட் நடிகர்கள், துணை நடிகர் நடிகைகள், நடன கலைஞர்கள் உள்ளிட்டோர் இந்த தியேட்டரை சுற்றித்தான் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment