Friday, July 10, 2009

நாய்களை கொல்வதற்கு எதிர்ப்பு: மத்திய அரசு மனு

மும்பையில் வீதிகளில் சுற்றித் திரியும் நாய்களை கொல்வதற்கு மும்பை மாநகராட்சிக்கு, மும்பை ஐகோர்ட் கடந்தாண்டு டிசம்பரில் அனுமதி அளித்தது. ஆனால், இந்த விஷயத்தில் எந்தவித மேல் நடவடிக்கைகளையும் எடுக்காமல், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் விலங்குகள் நல பிரிவு அமைதி காத்து வந்தது.


இதற்கிடையே, நாய்களை கொல்வதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நாய்களை கொல்வதற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரியில் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், எட்டு மாத கால மவுனத்துக்கு பின், தற்போது இந்த விஷயத்தில் மத்திய அரசு களம் இறங்கியுள்ளது.

சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் சார்பில், நாய்களை கொல்வதற்கு தடை விதிக்க வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஏற்கனவே, இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த முயற்சி வெறும் சம்பிரதாயமான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.


நாய்களை கொள்வதற்கு எதிர்ப்பு தெருவிக்கும் மத்திஅரசு ஈழத் தமிழன் கொல்லப்படும்போது வாய்பொத்தி கைகட்டிநின்றது ஏன் ?

No comments:

Post a Comment