Monday, August 3, 2009

கணவன் சடலத்துடன் வாழ்ந்த பெண்

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் வசித்த ரயில்வே ஊழியர் ஜெயக்குமார் (53). இவரது மனைவி ரேணுகா (48). குழந்தைகள் இல்லை. கணவன் இறந்தது பற்றி யாரிடமும் சொல்லாமல் வீட்டிலேயே வைத்திருந்தார். துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல் பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அதன் பின்பும் உறவினர்கள், போலீசாரை வீட்டுக்குள் ரேணுகா அனுமதிக்கவில்லை. இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயக்குமார் நெஞ்சு வலியில் இறந்ததாகவும், அவர் இறந்து 6 நாட்கள் ஆகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.


அவருக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, 3வது முறை கடும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். எனவே, ஜெயக்குமாரை ரேணுகா கொலை செய்யவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். “கணவன் இறப்பால் ரேணுகாவின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தனியாக விட்டால் தற்கொலை செய்து கொள்வார். எனவே அவரை மருத்துவமனையில் சேருங்கள்’’ என்று அவரது உறவினர்களிடம் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் உறவினர்கள் மீண்டும் அவரது வீட்டுக்கு சென்று அழைத்துள்ளனர்.

ஆனால், அவர் வர மறுத்துள்ளார். பின்னர், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment