Wednesday, August 26, 2009

இண்டர்வியூ அழைப்பை வரவைப்பது நெரம்ப ஈசி...








கொஞ்சம் உபயோகமாக பதிவை போடலாம் என நினைத்து செய்யும் வேலை வேறாக முடிந்தால் மன்னிக்கவும். மேலும் இதில் உள்ள விசயங்கள் ஆரம்ப நிலை வேலை தேடுபவர்களுக்கானது. நீங்கள் பல வேலை மாறியவர் மற்றும் இதில் கரைகண்டவர் என்றால் என்னுடய மற்ற பதிவுகளை படியுங்கள். இது சமீபத்தில் நான் படித்த/ தேடிய விசயங்கள் உங்களுக்காக....


இப்போதெல்லாம் அனுபவம் உள்ளவர், இல்லாதவர் எல்லோருமே வேலை மாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் படித்த சர்ட்டிபிக்கேட் இருக்கிறதோ இல்லையோ Resume / CV / Bio Data ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். அதை பற்றிதான் இந்த பதிவு. இந்த Resume / CV / Bio Data சரியாக அமைந்துவிட்டால் 80% இண்டர்வியூ அழைப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் பெரும்பாலும் உங்களுடைய Resume / CV / Bio Data வை பார்த்துதான் interview calls வரும். இதைப் பற்றி தனித்தனியே


Resume


ப்ரெஞ்சு வார்த்தையான Resume என்பதற்கு Summary என்று பொருள் தமிழில் முன்னுரை அல்லது விளக்கவுரை என்று நினைக்கிறேன்.


இது பொதுவாக உங்களுடைய வேலை, படிப்பு, திறமை பற்றி சொல்லி இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் முடிய வேண்டும். உங்கள் படிப்பை பற்றி சொல்லி, திறமை மற்றும் உங்கள் தற்போதைய வேலையில் இருந்து உங்கள் அனுபவத்தை சொன்னால் சிறப்பாக இருக்கும். மிதமான அனுபவம், இடைநிலை மேலாண்மை ( middle management) நிலை வேலைகளுக்கு சரியாக இருக்கும்.




CV - Curriculum Vitae


என்னும் லத்தின் வார்த்தைக்கு வாழ்க்கையின் வரலாறு (course of life) என பொருள் படும்.

பெரும்பாலும் இது 3 அல்லது 4 பக்கங்களுக்கு மேல் கூட போகலாம். உங்கள் திறமை, படிப்பு பற்றி விவரமாக சொல்லலாம்.


முதல் வேலை தேடுபவர்கள், புதிய வேலையை தேர்ந்து எடுப்பவர்கள் உபயோகப்படுத்தலாம்.



Bio Data


Biographical Data என்பதன் சுருக்கம் இது. உங்களுடைய சொந்த விவரங்களில் ஆரம்பித்து வேலை மற்றும் திறமையில் போய் முடியும். சமீப காலங்களில் இதனை நிறைய பேர் உபயோகிப்பதில்லை.





எல்லா Format லும் தேவையில்லாத விசயங்கள்


Sex

Religion ( சில வேளைகளில் தேவைப்படும்)

Cast

height ( சில வேலைகளில் தேவைப்படும்)

weight ( சில வேலைகளில் தேவைப்படும்)


முடிக்கும் போது Personal declaration செய்து Yours Sincerely போதுமானது (இன்னும் சில ரெசுயூமேக்களில் Your obediantly, truly, with Love எல்லாம் இருப்பதை பார்க்கிறேன்)

அப்புறம் Photo வெள்ளை அல்லது வெளிர் நீல பின்புலத்துடன் சதாரணமாக இருக்க வேண்டும். போட்டோவிலேயே பயமுறுத்த கூடாது.

என்னுடை நண்பரின் resume ல் பழைய கம்பெனியில் எப்படி இவரை பார்த்துகொண்டனர், ப்ரோமோஷன் வாங்கினார் என்றெல்லாம் அரைப்பக்கத்திற்கு எழுதியிருந்தார். இது போன்ற விஷயங்கள் sort list செய்வதற்கு சிறிதும் உதவாது.


எப்படியோ sort list ஆகி Interview call வருவதற்க்கு ஏற்பாடு செய்தாயிற்று.


அடுத்தது Interview அது பற்றி............ சீக்கிரமே

ஏதாவது சொல்ல நினைச்சா சொல்லிடுங்க.. இல்லாட்டி காக்கா கடிக்கும்..

No comments:

Post a Comment