Sunday, August 9, 2009

நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு 21% சரிந்தது!

டெல்லி: நாட்டில் நெல் பயிரிடும் நிலத்தின் பரப்பளவு 21 சதவீதம் சரிந்துள்ளது.

இதையடுத்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை பொய்த்துவிட்டதால் உணவு தானிய உற்பத்தி சரிவடைவதைத் தடுக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவுள்ளது.

இதன்படி மத்திய அரசு, நெல் கொள்முதலுக்காக ஒரு குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத் தொகை வழங்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் நெல் பயிரிடும் பரப்பளவு 114.63 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. இது சென்ற ஆண்டு 145.21 லட்சம் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment