Wednesday, August 26, 2009

காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார்.

தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment