Friday, August 14, 2009

ஒரே பள்ளிக்கூடத்தில் 57 ஜோடி இரட்டைக்குழந்தைகள்

சிவகாசியில் இந்து நாடார் விக்டோரியா பள்ளியில் 57 ஜோடி இரட்டைக்குழந்தைகள் படித்து வருவது

ஆச்சரியப்படவைக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தின் 115 ஆண்டு தொன்மையான இந்த பள்ளி இந்த ஜோடிகளால் தற்போது மேலும் புகழ்பெற்று வருகிறது.

2003ம் ஆண்டு தமிழகத்தின் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட இந்தப்பள்ளிக்கு மகாத்மா காந்தியடிகள், காமராஜர், நேரு, ராஜாஜி போன்ற தலைவர்கள் வந்த பெருமையும் உள்ளது.

இந்த பள்ளியில் தற்போது 57 ஜோடி இரட்டை ஜோடிகள் படித்துவருவதை இப்பள்ளியின் ஆசிரியர்கள் மேலும் பெருமையாக கருதுகின்றனர்.

எல்கேஜி முதல் மேல்நிலை வரை உள்ள இந்த பள்ளியில் உள்ளது. பிரைமரி நர்சிங்கில் 4 ஜோடி மாணவர்களும், நடுநிலைப்பள்ளியில் 25 ஜோடிகளும், மேல்நிலைப்பிரிவுகளில் 23 ஜோடிகளும், மெட்ரிக்பிரிவில் 5 ஜோடிகளும் படித்து வருகின்றனர். ஒரே பள்ளியில் 57 இரட்டை ஜோடிகள் இருப்பது அதிசயம் என்றால், இவர்கள் படிப்பிலும் கலக்கி வருவது ஆச்சரியப்படவைக்கிறது.

இந்த இரட்டை மாணவர்களை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களுக்கு சில நேரங்களில் குழப்பம் ஏற்படுவதும் உண்டு. ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களை அடையாளம் காணுவதற்காக ஆசிரியர்கள் இரண்டு வெவ்வேறு இடத்தில் அமர வைத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் ஆல்பர்ட் செல்வராஜ் கூறும்போது, ஏற்கனவே ஏராளமான இரட்டை குழந்தைகள் படித்து கல்லூரிபடிப்பிற்கும், அரசு வேலைகளுக்கும் சென்றுள்ளனர்.

தற்போது 57 ஜோடிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் படிப்பிலும் படுகெட்டிக்காரர்களாகவே உள்ளனர். அரசு இந்த இரட்டைக்குழந்தைகள் உயர்கல்விக்கு செல்லும் போது, அவர்கள் செலுத்தும் தொகையை பாதியாக குறைத்தால் அவர்களது பெற்றோர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment