Thursday, August 6, 2009

சுனாமி- பூகம்பத்தால் பாதிக்காத வீடு: தமிழக மேஸ்திரி சாதனை

காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் (50). கட்டிட மேஸ்திரி. இவர் காஞ்சீபுரம் சங்கர மடம், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், அரக்கோணம், சென்னை கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கட்டிடப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

பூகம்பத்தால் வீடுகள் இடிந்து மக்கள் பலியாவதை தொடர்ந்து சுனாமி மற்றும் நில நடுக்கத்தால் பாதிக்காத பாதுகாப்பு நிறைந்த வீட்டை கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கினார்.

கடந்த 8 மாதங்களாக அவர் தனது கிராமத்தில் இரவு- பகல் பாராமல் உழைத்து 974 டன் இரும்பு கம்பி மற்றும் சிமெண்டு- ஜல்லி கலவையிலான உருளை வீட்டை கட்டி முடித்து சாதனை புரிந்தார்.

இந்த வீட்டை நமக்கு தேவையான இடத்துக்கு எந்தவித சேதாரமும் இன்றி நகர்த்தி செல்ல முடியும். உருளை வடிவான வீட்டில் சமையல் அறை, கூடம், குளியலறை, படுக்கை அறை மற்றும் பாதாள அறை ஆகியவை அமைந்துள்ளது. வீடு முழுவதும் ஒரு செங்கல் கூட இல்லாமல் முழுவதும் கம்பி- கான்கிரீட்டால் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 2 அடுக்குகள் கூட அமைக்கலாம். சதுர அடி ரூ. 1000 வீதம் ரூ. 4.5 லட்சத்தில் இந்த உருளை வீட்டை அமைத்துள்ளார். சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடற்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு பாதிக்காத வகையில் பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடியது.


அரசு ஆதரவு அளித்தால் கடலோர கிராம மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான வசதிகள் நிறைந்த வீடுகளை உருவாக்க முடியும் என்று பத்மநாபன் கூறினார்.

No comments:

Post a Comment