Sunday, August 9, 2009

சிவபெருமானின் சூலம் தெரிந்தது:ஓசூர் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காளேஸ்வரம் கிராமத்தில் தனியார் பிளைவுட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு அலுவலகம் கட்டத் தொடங்கிய போது நடுவில் ஒரு பாறை தென்பட்டது.


இதை அகற்ற வெடி வைத்தனர். ஆனால், பாறை உடையவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் பாறையை சுற்றிலும் இருந்த மண்ணை அகற்றினர்.

அப்போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் அருள் வந்து ஆடினார். இங்கு ஈஸ்வரன் தங்கியிருக்கிறேன், என்னை அகற்ற நினைக்காதீர்கள் என்று கூறினார்.

உடனே, அங்கிருந்த தொழிலாளர்கள் பாறையை சுத்தம் செய்தனர். அப்போது, பாறையில் சிவனின் தலைப்பகுதியில் உள்ள பிறை மற்றும் நட்சத்திர வடிவமும், அதன் ஒரு பக்கம் திரிசூலமும், மறுபக்கம் உடுக்கையும் இருந்ததாக தொழிலாளர்கள் கூறினர்.

இதையடுத்து, அந்தப் பாறைக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியது. கிராம மக்கள் திரண்டு வந்து பூஜை செய்தனர்.

இது பற்றி அறிந்த தனியார் நிறுவனம், அந்த இடத்தில் ஈஸ்வரன் கோயில் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஓசூர் தாசில்தார் முனிராஜ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

No comments:

Post a Comment