Tuesday, August 18, 2009

இனப்பிரச்னை தீர்வுக்கு வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் இலங்கை அரசு பேச வேண்டும்: அமெரிக்கா


இனப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் இலங்கை அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.


பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் ராபர்ட் ஓ பிளேக்,

போர் காரணமாக இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களையும், இலங்கை அரசு விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்றும் பிளேக் அதில் கூறியுள்ளார்.

அரசியல் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு காட்டிவரும் மெத்தனம் குறித்து மேற்குலகம் கொண்டுள்ள விசனத்தையே அமெரிக்கத் துணை அமைச்சர் கூறியுள்ள கருத்து வெளிப்படுத்துவதாக பிபிசி கருத்துக் கூறியுள்ளது.

பெரும்பான்மைச் சிங்களவர்களால் வழிநடத்தப்படும் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சிறுபான்மைத் தமிழர்களின் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வழி பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை தோன்றியிருந்தது.

No comments:

Post a Comment