Tuesday, August 4, 2009

9 கிலோ தேனீக்களை நான்கு மணி நேரம் சுமந்து சாதனை


கோவையில் நேற்று நடந்த “லிம்கா’ உலக சாதனை நிகழ்ச்சியில், ஒன்பது கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உடலில் மொய்க்கச் செய்து, பார்வையாளர்களை வியக்க வைத்தார் வாலிபர் ஜெயகுமார். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் ( 27). தேனீ வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார்; “நேச்சுரல் ஹனி’ என்ற தேன் தயாரிப்பு நிறுவன உரிமையாளர். இவர், 2005ம் ஆண்டில் 60 ஆயிரம் தேனீக்களை உடலில் மொய்க்கச்செய்து சாதனை செய்தார். நேற்று, ஒன்பது கிலோ எடையுள்ள ஒன்றரை லட்சம் தேனீக்களை உடலில் மொய்க்க வைத்து சாதனை செய்தார். கோவை, திருச்சி ரோட்டில் உள்ள ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் வளாகத்தில், இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. காலை 10.00 மணிக்கு துவங்கி, மதியம் 2.00 மணி வரை தொடர்ந்து நான்கு மணி நேரம், இத்தாலி நாட்டுத் தேனீக்களை உடலில் மொய்க்கச்செய்து ஜெயகுமார் லிம்கா சாதனை புரிந்தார். தலை, முகம், கழுத்து, கைகள், உடல் பகுதி என முழங்கால் வரை தேனீக்கள் மொய்த்த நிலையில், நான்கு மணி நேரம் ஒன்றரை லட்சம் தேனீக்களுடன் அவர் இருந்தார்.

No comments:

Post a Comment