Wednesday, October 21, 2009

சாட்டிங்:சைபர் கிரைம் குற்றவாளிகள்

கல்லூரியில் படிக்கும் காலம் முதல் அனைத்து இளைஞர்களுமே “இ-மெயில்” முகவரி வைத்துள்ளார்கள். தினசரி பேப்பர் படிப்பது போல இந்த இ-மெயிலில் வரும் தகவல்களை படிக்காமல் சிலருக்கு தூக்கமே வராது.

இளைஞர்கள் இளம்பெண்கள் மட்டும் அல்ல, திருமணம் முடிந்து வீட்டில் அடைபட்டு கிடக்கும் பல இளம் குடும்பத்தலைவிகளும் இப்போது தங்களுக்கு நேரம் போகவில்லை என்றால் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து விளையாட ஆரம்பித்து விடுவார்கள்.

இதில் குடும்ப பெண்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும் ஆபத்தான விளையாட்டுத்தான் சாட்டிங்.

நேரம் போகாமல் கம்ப்யூட்டரில் யாரோ ஒருவருடன் நீண்ட நேரம் பேசி பழகுவதுதான் சாட்டிங். சிலர் ஒரே நேரத்தில் 5 பேர்களுக்கு கேள்வி - பதில் அனுப்பி கிரங்கடிப்பார்கள்.


இப்படி முகம் தெரியாத நபருடன் பேசிப் பழகும் போது தான் சிலருக்கு கொடூர புத்தி கொண்ட சைபர் கிரைம் குற்றவாளிகளுடன் தொடர்பு கிடைத்து வருகிறது.

இது ஏமாற்றி பணம் பறிப்பதோடு மட்டும் நிற்காமல், குடும்பத்தை சீரழிக்கும் கள்ளத்தனமான செக்ஸ் தொடர்புக்கும் வழி வகுத்துவிடுவதுதான் வேதனையிலும் வேதனை?

சாட்டிங்போது பிடித்த நபருக்கு தங்கள் “இ-மெயில்” முகவரியை கொடுப்பார்கள். பின்னர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொடர்பு கொள்ளும்படி ஏற்பாடு செய்து கொள்வார்கள்.

முதலில் நல்லவர்கள் போல் பேசிப்பழகி போகப்போக “செக்ஸ்” விஷயத்துக்குள் புகுந்து விடுவார்கள்.

ஒரு குடும்ப பெண், சாட்டிங்கின் போது ஆண்கள் வேண்டாம் என்று பெண்கள் முகவரியை தேடிப்போய் பேசினால் கூட அதில் சில ஆண்களே பெண்கள் போல் பெயர் வைத்து ஏமாற்றி விடுவார்கள். இந்த கம்ப்யூட்டர் சாட்டிங்கில் சிக்கி பாதை மாறிய நடுத்தர மற்றும் மேல் தட்டு பெண்கள், தங்கள் மானம் போய் விடுமோ என்று பயந்து போலீசில் புகார் செய்வதே இல்லை.


இதனால் சைபர் கிரைம் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளார்கள். இவர்கள் பிடியில் சிக்கி சீரழியும் குடும்ப பெண்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில பெண்கள் இப்பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் மனநோயாளி போல் மாறிவிடுகிறார்கள்.

இதை தடுக்க முதல் முதலாக களம் இறங்கி உள்ளார் நெல்லை பெண் தீபரதி ஹால்டர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி துறையின் பேராசிரியர் ஜெய்சங்கர் என்பவரின் மனைவியான இவர்,

“கம்ப்யூட்டர் சாட்டிங்”, “இ-மெயில்”போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு “ஆன்லைன் மூலம் சென்டர் பார் சைபர் விக்டிம் கவுன்சிலிங் மையம்”ஏற்படுத்தி குடும்ப பெண்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து வருகிறார்.

No comments:

Post a Comment