Wednesday, October 21, 2009

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் அனுமதி?

கொழும்பு: விடுதலைப் புலிகள் [^] ஜெனீவா நகரில் அமைக்கவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அமெரிக்கா [^] உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்கா தவிர, கனடா, பிரிட்டன், நார்வே மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கோட்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் கூறப்படுகிறது.

இதனால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கிய நாடுகளின் செயற்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை அரசு கூறியுள்ளது.

தமிழீழ அரசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக 59 தமிழர்கள் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டுகிறது. ருத்ரகுமாரன் உள்ளிட்ட இந்த நபர்கள் மீது மேற்கண்ட நாடுகள் நடவடிக்கை [^] எதுவும் எடுக்காமல் இருப்பதால் இலங்கை அரசு மேலும் எரிச்சலடைந்துள்ளதாம்.

No comments:

Post a Comment