Wednesday, October 21, 2009

5 ரூபாய்க்கு மருத்துவச் சிகிச்சை - வித்தியாசமான மருத்துவர்











சேவை நோக்கத்தோடு செயல்படும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓய்வுபெற்ற அரசு மருத்துவ அதிகாரி ஜி.புஷ்பவனம்.

சாதாரணமாக
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சென்றாலே "கணினி பில் புனிதமாகப்
போற்றப்படும் மருத்துவத்துறை வணிகமயமாகி வரும் இந்தக் காலத்தில்' போட்டு
பணம் கறக்கும் இந்த ஹைடெக் "மெடி' யுகத்தில், வெறும் 5 ரூபாய்க்கு
மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார் இவர். தற்போது 63 வயதாகும்
புஷ்பவனம், மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக
கிளினிக் நடத்தி வருகிறார்.




எப்படி இந்த 5 ரூபாய் சிகிச்சை? என அவரிடம் கேட்டோம்.



மருத்துவம் என்பது நோயாளியின் நோயைத்
தீர்க்கும் பணியாக இருக்க வேண்டுமே ஒழிய, பணத்தைப் பறிக்கும் ஒரு கருவியாக
இருக்கக்கூடாது என்பது என் எண்ணம். எப்பொருளும் விலையின்றி கொடுத்தால்
மதிப்பிருக்காது. அதனால்தான், குறைந்த கட்டணமாவது வாங்கி இச் சேவையை
அளித்து வருகிறேன். 28 ஆண்டுகளாக குறைந்த கட்டணத்தில் இச் சேவையைச் செய்து
வருகிறேன்.


தொடக்கத்தில் ரூ.3 கட்டணம்தான்
வசூலித்தேன். தற்போது ரூ.5 வசூலிக்கிறேன். இக்குறைந்த கட்டணத்தில்
சிசிச்சை அளிப்பதற்கு போதும் என்ற மனநிறைவுதான் காரணம். நான் வசித்த
பகுதிகள் பெரும்பாலும் கிராமப்புற பின்னணி கொண்டதால், மருத்துவத்துக்கு பல
ஆயிரம் பணம் செலவழிக்கும் நிலையில் பெரும்பாலானோரும் இல்லை என்பதை
நன்கறிவேன். இதனால், புற்றுநோயாளிகள், மனவளர்ச்சி குன்றியோர்,
தொழுநோயாளிகள், காசநோயாளிகள் என்றால் கட்டணம் வாங்குவதில்லை.


இதுதவிர, அவசர நேரத்தில் தொலைபேசி
மூலமும் தெரிந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பேன் என்று கூறும் புஷ்பவனம்,
தொழுநோயாளிகள், காசநோயாளிகளுக்கு தரமான இலவச சிகிச்சை பெற அரசு
மருத்துவமனைகளுக்குச் செல்லும்படி பரிந்துரையும் செய்கிறாராம்.


500-க்கும் மேற்பட்ட இலவச மருத்துவ
முகாம்களில் கலந்து கொண்டுள்ளதாக கூறும் இவர், இலவச மருத்துவ சிகிச்சை
அளிக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்ய விரும்புவதாக தெரிவிக்கிறார் இந்த
வித்தியாசமான மருத்துவர்.

1 comment:

  1. Hi Friends,
    நான் சோழவந்தான் பொண்ணுங்க நான் பிறந்ததில் இருந்தே,இந்த டாக்டர்ட்ட தான் பாப்போம்.இவர் ஒரு சிறந்த மருத்துவர் மட்டுமல்ல சிறந்த மனித நேயமிக்க மனிதர்..ஏனென்றால் டாக்டர் hospital குள்ள enter ஆனா வுடன் wait பண்ணிட்ருக்க எல்லாரையும் பார்த்து கண்ணாலே ஒரு வணக்கம் (வாங்க வாங்கனு) போடுவார் . அதேமாதிரி அவரோட room குள்ள போகும் போதும் ஏழை பணக்காரன் வித்தியாசம் பாக்காம யாரு வந்தாலும் வாங்க வாங்க னு... அவரோட புன்னகை கலந்த அன்பான வரவேற்பு பெத்தவுங்க வீட்ல கூட கிடைக்காதுங்க..அவரு பேசுற அன்பான பேச்சுலையே பாதி நோய் போய்டுங்க .. வர்ற எல்லார்ட்டயும் அவர் அடிகடி சொல்றது உங்க உடம்புக்கு ஒண்ணுமே இல்ல..... சும்மா சாதாரண வலி or காய்ச்சல் or etc ... govt bus ல தான் 1 hour traval பண்ணிட்டு..(மழை காலமாக இருந்தால் ஒரு குடையோட ) வருவாரு .. எல்லா patienta யும் பாத்துட்டு நைட் 12 மணிக்கு last பஸ்லதான் தான் வீட்டுக்கு போவார். எளிமையின் உருவம்னு சொன்னால் கூட பத்தாது..
    டாக்டர் மேலே சொன்னா மாதிரி அவருக்கு phone பண்ணி(incaseof emercency ) வைத்தியம் கேட்டால் கூட முகம் சுளிக்காம அன்போட பொறுமையா பேசுவார். எதாவது ஸ்கேன் report அவசரமா காட்டனும்ன அவரோட வீட்டுக்கே வரச்சொல்லி பார்ப்பார் ..அப்பவும் கூட பைசா வாங்க மாட்டார். அவருக்கு ஏற்ற அன்பான, எளிமையான, அனுசரித்து போகக்கூடிய மனைவி. . அவர் ஏழைகளிடம் மட்டுமல்ல யாரிடமும் எதையும் எதிர்பார்கதவர் bcas அவரோட மகன் கல்யாணத்துக்கு கூட மொய் வாங்கவில்லை (மொய் table'லே இல்லை) என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இவ்வளவு விளக்கமாக நான் கூற காரணம்........டாக்டர் என்றாலே காசு பிடுங்குபவர் என்று எண்ணி நோகும் மக்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்குமே என்ற காரணத்துக்காக தான் . உலகத்துல பிறந்ததுக்கு இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர பார்த்தோம் ன்ற திருப்தி எனக்கு இருக்கு .... உங்களுக்கு அந்த திருப்தி வரணும்னா நீங்களும் போய் அந்த நல்ல மனிதரை பாருங்க.. if you want more details about doctor means mail me at mukilesh1@gmail.com . கடைசியாக நான் நன்றி கூற விரும்புவது ...இவ்வளவு அற்புதமான மனிதரை ஈன்றெடுத்து வளர்த்த அன்னைக்கே ... டாக்டர் உங்களோட இந்த சேவை (அன்பு கலந்த) எங்களுக்கு கிடைச்ச ஒரு வரப்ரசாதம் sir . Thanks Alot டாக்டர்.

    ReplyDelete