Wednesday, October 21, 2009

பி.டி.கத்திரிக்காய்: நம்மாழ்வார் கருத்து

கோவை வேளாண்மை பல்கலைக்கழகமும், அமெரிக்க விதை நிறுவனமுமான மான்சான்டாவின் இந்திய பங்கு தாரரான மஹிகோ நிறுவனமும் சேர்ந்து காய்ப்புழு தாக்குதலை எதிர்க்கும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய்களை உற்பத்தி செய்துள்ளன.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை சாப்பிட்டால் புற்று நோய், அலர்ஜி உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

ஆனால் இந்த கத்தரிக்காய்களை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என கோவையில் உள்ள தமிழக வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முருகேசபூபதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார்,

’’விவசாய பொருட்களில் மரபணு மாற்றம் செய்யும்போது ஒருவித வைரஸ் கிருமிகளை புகுத்திதான் இந்த மாற்றங்களை செய்கிறார்கள். எனவே அந்த பொருட்களை சாப்பிடும் போது அந்த வைரஸ்கள் உடல்களையும் தாக்கும்.

இதனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய்கள் போன்றவற்றை சாப்பிடும் போது நமது உடல் அணுக்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண்களுக்கு கர்ப்ப பையில் தாக்குதல் ஏற்பட்டு கரு முட்டைகள் பாதிக்கப்படும்.


ஆண்களுக்கும் குழந்தை உற்பத்தி அணுக்கள் பாதிக்கப்படும். இதனால் ஆண்- பெண் இருவருக்குமே மலட்டு தன்மை ஏற்படும்.

புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களும் ஏற்படும். உடல் உறுப்புகள் பாதிக்கும். ரத்த அணுக்கள் பாதிக்கப்படும்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment