Thursday, September 24, 2009

கார்களுக்கு அடியில் கதிகலங்கும் பயணம்: லிம்போ ஸ்கேட்டிங்கில் கர்நாடகச் சிறுவன் சாதனை

rohan-ajit-kokane.jpg

ர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன் ஒன்பது வயது ரோஹன் அஜீத் கோகனே. இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வரும் லிம்போ ஸ்கேட்டிங்கில் புது சாதனை படைத்திருக்கிறது இந்த வாண்டு.

வரிசையாக நிற்கவைக்கப்பட்ட மூன்று கார்களுக்கு அடியில் லிம்போ ஸ்கேட்டிங் மூலம் தரைமட்டத்திற்கு குனிந்து, பயணித்து ஒரு கீறல் இல்லாமல் வெளியே வந்திருக்கிறான் ரோஹன்.

எட்டு இன்ச் இடைவெளி கிடைத்தாலே புயலென புகுந்து வெளியேறிவிடும் இவனுக்கு கார்களுக்கு அடியில் பறந்து செல்வது பெரிய சாதனையாகத் தெரியவில்லை. உலக சாதனை அமைப்பு இவனுடையத் திறமையை ப் பாராட்டி பதக்கமும் சான்றிதழும் தந்திருப்பதுடன் கின்னஸ் நிறுவனத்துக்கும் பரிந்துரைத்திருக்கிறத.

கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஸ்கேட்டிங்கை பொழுதுபோக்காக தொடங்கிய அஜீத் தற்போது அதை தினசரி நான்கு மணி நேரம் பயிற்சி மேற்கொள்ளும் அளவுக்கு தீவிர விளையாட்டாக மாற்றிக் கொண்டிருக்கிறான்.

உள்ளூர் பயிற்சியாளர் சூர்யகாந்த் ஹிண்டல்கெல்கர் ரோஹனின் அசாத்திய திறமையைக் கண்டு அவனை ஊக்கப்படுத்தியிருக்கிறார்.

“நான் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். ஆனால் ரோஹனின் உடலின் வளையும் தன்மையும், அதை அவன் கட்டுப்படுத்தும் பாங்கும் ஆச்சரியப்படுத்துகிறது. இத்துறையில் அவன் மிகப் பெரிய சாதனைகளை செய்வான் என நம்பலாம்” என்கிறார்.

தரைமட்டத்திற்கு உடலை வளைத்து ஸ்கேட்டிங் செய்வது லிம்போ ஸ்கேட்டிங் எனப்படுகிறது. இதில் அனிகெட் சிண்டெக் என்ற ஆறு வயது சிறுவன் கடந்த வருடம் நடந்த சாதனை நிகழ்வொன்றில் 53 நொடிகளில், 81 கார்களின் அடியில் (தரைமட்டத்திற்குக் குனியாமல்) ஸ்கேட்டிங் செய்து அசத்தியதுதான் இதுவரையிலான உலகச் சாதனை. ரோஹனும் சாதிப்பான் விரைவில்.

No comments:

Post a Comment