Monday, November 2, 2009

நாளை மறுநாள் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு

இலங்கை ராணுவ படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம், போர் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரி கள் விசாரணை நடத்த உள்ளனர்.

இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த சண்டையின் போது, போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.

போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது.

மே 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை இலங்கையில் நடந்த 170 குற்றங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்து.

சரத்பொன்சேகா தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரிடம், இலங்கை அதிபரின் சகோதரரும், ராணுவ செயலருமான கோத்தபையா எந்தெந்த முறையில் போர் விதிமுறைகளை மீறியுள்ளார். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை விளக்கும்படி அமெரிக்க உள்துறை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

நாளை மறுநாள் பொன்சேகாவிடம் இது குறித்து அவர்கள் விசாரணை நடத்த விருக்கிறார்கள்.

No comments:

Post a Comment