Monday, November 2, 2009

செல்போன் அதிர்வுகளால் தேனீக்கள் பாதிப்பு

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நுகர்வோர் மன்றங்களுக்கான புத்தொளி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பை கலெக்டர் ராஜேந்திரன் தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது, ‘’நுகர்வோர் உற்பத்தியாளர் என்ற தரப்பினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து உள்ளனர். அதற்கான இலக்கிய, சரித்திர ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. எடை குறைவு, கலப்படம் போன்றவை பல ஆண்டுகளாக உள்ளன. தற்போது அவற்றை அகற்றும் சூழலும் உருவாகி உள்ளது.

இந்தியாவில் 15 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின்றனர். இந்த செல்போன்கள் அதிர்வுகளால் தேனீக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இதனால் அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றன. தற்போது சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுவதால், நாம் அனைவரும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவேண்டும். தற்போது பாலித்தின் பைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் தவிர்க்கவேண்டும்.


பொதுவாக நாம் பொருட்களை வாங்கும்போது அதில் அதிகபட்ச விலை அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த விலையை காட்டிலும் கூடுதலாக விற்பார்கள். ஏன் என்று கேட்டால் வரி உள்பட சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கின்றனர்.

மருந்து கடைகளில் மருந்து வாங்கும் போது அதில் காலாவதியாகும் தேதியை பார்த்து வாங்கவேண்டும். அந்த தேதிக்கு மேல் விற்றால் நுகர்வோர் மன்றங்களில் வழக்கு தொடரலாம்.


மேலும் நுகர்வோர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும் கேள்வி கேட்கலாம். ஆனால் சிலர் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள். நுகர்வோரை பொறுத்தவரையில் உத்திரவாதம் உள்ள பொருட்களை வாங்கவேண்டும்’’என்று பேசினார்.

No comments:

Post a Comment